Search This Blog

Friday, 24 July 2020

சிவபெருமானை எவ்வாறு அறியலாம்??

💐திருச்சிற்றம்பலம்💐
""""""""'""'''"''""''''''''''''''"""'"'"'
பிரம்மா, திருமால் இருவரும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் தோன்றியதும், சிவபெருமான் அவர்கள் முன் பெரிய நெருப்புத் தூணாக நின்றார்.  எனவே, அந்த திருவுருவத்தின் திருமுடியை அறிய பிரம்மாவும்🦢, திருவடியை அறிய  விஷ்ணுவும்🐗 முயன்றனர்.  ஆனால் அவர்களால் காண இயலவில்லை. பிறகு அவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்தவுடன் அவர்களுக்கு அருள் புரிந்தார்.
*************
இப்புராணம் உணர்த்தும் கருத்து:🌺🌺🌺
**************
இறைவன் வியாபகமாக எங்கும் நிறைந்திருப்பவர்.  அவ்வாறு இருக்கும் சிவபெருமானை நம்மால் அறிவைக் கொண்டு ஆராய்ந்து அறிய இயலாது.  ஆனால் அவர் திருவருளாலே  அவரிடம் சரணடைந்து அன்பு செலுத்தினால் அவர் தாமாகவே அவரை அறிவதற்கு உதவுவார்.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
எனவே, நாமும் அவர் திருவருளாலே அவரிடம் சரணடைந்து, அகிலம் காக்கும் பரம்பொருளான சிவபெருமானிடம் அன்பு செலுத்துவோமாக😇😇.
""""""""""""""""""""""""""""""
💐திருச்சிற்றம்பலம்💐

No comments:

Post a Comment