Search This Blog

Wednesday, 12 August 2020

வேதத்தின் சிறப்பு

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

திருமந்திரம் -- பாயிரம் -- வேதச் சிறப்பு:

🌼🌼🌼🌼🌼

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்

ஓதத் தகும்அறம் எல்லம் உளதர்க்க

வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே

🌼🌼🌼🌼🌼🌼

விளக்கம்:  

⭐வேதங்களை விட இறைவன் வழங்கிய அறம் வேறொன்றும் இல்லை.

---------------------

⭐ஓதுவதற்கும் அதன்படி நடப்பதற்கும் ஏற்ற அறங்கள் எல்லாம் வேதத்தில் உள்ளது.

---------------------

⭐நமது முன்னோரான அறிவிற் சிறந்த ஞானிகள் அனைவரும் இறைவன் வழங்கிய வேதத்தை ஏன்?? எதற்கு?? என்கிற வீண் விவாதங்கள் செய்யாமல் அனைவரும் இறைவன் வழங்கிய வேதத்தை ஓதியே முக்தியைப் பெற்றார்கள்.

💐💐💐💐💐💐💐💐💐

No comments:

Post a Comment