திருமந்திரம்💐💐 -- மூன்றாம் தந்திரம் -- காலச்சக்கரம்:
**********
பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குட னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே
**********
விளக்கம்🌻: பிறவிச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு இறைவனை அடைய உதவும் இந்த பிறவி எப்படி அழிந்து போகின்றது என்பதைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
வினைகளைத் தீர்த்துக் கொண்டு தம்மை அடைய வேண்டும் என்பதற்காக இறைவன் கொடுத்த இப்பிறவியை உயிர்கள் தமது ஆசையின் வழியே சென்று மேலும் மேலும் அதிகமாக வினைகளை சேர்த்துக் கொண்டே இருந்தால், இந்த வாழ்க்கை சீர்குலைந்து எந்தவித இலக்கும் இல்லாமல் திரிந்து மீண்டும் மீண்டும் பிறந்து👶🏻 அழிகின்ற⚰ வாழ்க்கையாக மாறிவிடும்.
💮💮💮💮💮
கருத்து💐: உயிர்கள் ஆசையின் வழி செல்வதால் வினைகளை சேர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்துக்கொண்டே இருக்கின்றன.
🌷🌷🌷🌷🌷🌷🌷
No comments:
Post a Comment