திருநீற்றின் பெருமை:💐💐
------------------------------
இரண்டாம் திருமுறை -- 66வது பதிகம் -- முதல் பாடல்:🌸
------------------------------
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே
-------------------------------
விளக்கம்:🏵
சிவந்த பவளம் போன்ற வாயை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு:
💐💐💐💐💐💐💐
💫மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது
💐💐💐💐💐💐💐
💫வானவர் (சிவலோகத்திலுள்ளவர்) தன் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது
💐💐💐💐💐💐💐
💫அழகு தருவது
💐💐💐💐💐💐💐
💫எல்லா நூல்களாலும் புகழப்படுவது
💐💐💐💐💐💐💐
💫ஆகமத்தில் புகழ்ந்து சொல்லப்படுவது
💐💐💐💐💐💐💐
💫சிவசமயத்தில் நிலைத்துள்ளது
என்று திருஞானசம்பந்தர் திருநீற்றின் பெருமையை உணர்த்துகின்றார்😇
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
No comments:
Post a Comment