சிவபெருமான் திருவருளால் திருநாவுக்கரசர் நிகழ்த்திய சில அற்புதங்கள்:
🌹🌹🌹🌹🌹🌹
(1)மகேந்திரவர்மப் பல்லவன் இவரைக் கொழுந்து விட்டு எரியும் நீற்றரையில்🔥 உள்ளே அடைத்த போது சிவபெருமான் திருவருளால் தாமரைக்குளம் போல குளிர்ந்து ❄எந்த பாதிப்பும் இல்லாமல் வெளியே வந்தார்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(2)மகேந்திரவர்மப் பல்லவன் பட்டத்து யானையை 🐘ஏவி அவரை மிதிக்கச் செய்யுமாறு செய்தான். அப்பர் பதிகம் பாட, யானையோ அவரை வலம் வந்து நிலத்தில் பணிந்து வணங்கியது.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(3)மகேந்திரவர்மப் பல்லவன் இவரைக் கல்லில் கட்டி கடலில் வீசிய போதும் "நற்றுணையாவது நமச்சிவாயவே" என்னும் பதிகம் பாடி கடலில்🌊 கல்லுடன் மிதந்து கரை சேர்ந்தார்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(4)மகேந்திரவர்மப் பல்லவனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறும்படி செய்தார்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(5)திருமறைக்காட்டில் மூடியிருந்த கோயில் கதவைப் பதிகம் பாடி திறக்கச் செய்தார்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(6)பாம்பு🐍 தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பெற்று எழச் செய்தார்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment