Search This Blog

Saturday, 22 August 2020

உண்மை பசி எது?

 💐திருமந்திரம்💐 -- முதல் தந்திரம் -- நல்குரவு (வறுமை)

🌟🌟🌟🌟🌟

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்

றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்

எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்

அக்குழி தூரும் அழுக்குஅற்ற போதே

🌟🌟🌟🌟🌟

விளக்கம்:🌻

உயிர்களின் வயிறு என்பது ஒரு பொய்யான குழியைப் போன்றது.  பசி வரும்போது உணவு🍚 சாப்பிட்டு பசி தீர்ந்தது😋 போலத் தெரிந்தாலும் மீண்டும் நான்கு🕓 மணி நேரத்தில் பசிக்க ஆரம்பித்து விடுகின்றது🤤.  இப்படி பொய்யாக இருக்கும் வயிறு என்னும் குழியை நிரப்புவதற்கு உணவு🍚 கிடைக்குமா என்று உயிர்கள் தினமும் தேடி அலைகின்றன🏃‍♂️🏃🏼‍♀️.  அவ்வாறு உணவைத்🍚 தேடி பசியைப் போக்கிக் கொண்டாலும், எந்த வேலை செய்தாலும், எப்படி பொருள்💰💴 சம்பாதித்தாலும் அதிலேயே மூழ்கி இருந்துவிடாமல் இறைவனைப் போற்றுதற்கும்🙏🏾, புகழுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.  அவ்வாறு செய்தால் உயிர்களின் மும்மலங்கள் (ஆணவம், கன்மம், மாயை) நீங்கி உள்ளம் தெளிவு பெறும்.  உள்ளம் தெளிவு பெற்ற உயிர்களின் பிறவிப்பசி அப்போதே தீர்ந்து இனி பிறவி இல்லாத மோட்ச நிலை கிட்டிவிடும்.


No comments:

Post a Comment