மாணிக்கவாசகர், திருவருளை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதை இப்பாடலில் விளக்கியுள்ளார்
***************************
திருவாசகம் -- குலாப் பத்து -- பாடல் 9
-----------------------------------------
பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத்
தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே
-----------------------------------------
விளக்கம்:
🌼🌼🌼🌼🌼
பாழ் நிலத்தை உழுபவனுக்கு புதையல்💰💰 அகப்பட்டது போல, மலர்ச்சியற்ற🥀 வாழ்விலே சுழல்கின்ற எனக்கு உன் அருளாகிய புதையல்😇 கிடைத்தது என்பதாம்.
----------------
பாழ் நிலத்தை உழுது வருந்தியிருந்தவனுக்கு😔 ஒரு புதையல்💰💰 கிடைத்தால் எவ்வாறு போற்றுவானோ🤩 அதுபோல் வாடி வருந்தியிருந்த😔 எனுக்குக் கிடைத்த உனது திருவருளை நான் போற்றி வாழ்கின்றேன்😇 என்று மாணிக்கவாசகர் கூறுகிறார்
-----------------
இறைவன் திருவருளைப் பொன் போலப் போற்றி வாழ வேண்டும் என்பது இப்பாடலில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment