Search This Blog

Friday, 7 August 2020

திருஞானசம்பந்தர் நிகழ்த்திய சில அற்புதங்கள்

 சிவபெருமான் திருவருளால் திருஞானசம்பந்தர் நிகழ்த்திய சில அற்புதங்கள்:🌻🌻

(1) மூன்று வயதுக் குழந்தையாக👶🏻 இருந்த போது தன் தந்தையுடன் கோயிலுக்குச் சென்று அங்கே தந்தை சிறிது நேரம் நீருள் மூழ்கியிருக்கும் சமயத்தில், தந்தையைக் காணவில்லை என்ற அழுத குழந்தைக்கு தேவி பார்வதியே ஞானப்பால்🍼 தந்து அருளினார்.

🌟🌟🌟🌟🌟🌟🌟

(2) திருமறைக்காட்டில் உள்ள ஆலயத்தில் மூடியிருந்த கதவுகளை அப்பருடன் சேர்ந்து பதிகம் பாடி திறக்கவும், மூடவும் செய்தார்.

🌟🌟🌟🌟🌟🌟🌟

(3) திருபாச்சிலாச்சிரமத்தில் அரசன் மழவன் மகளின் முயலகன் நோயை நீக்கினார்.

🌟🌟🌟🌟🌟🌟🌟

(4) திருமருகலில் பாம்பு🐍 தீண்டிய வணிகனின் விடம் நீக்கினார்.

🌟🌟🌟🌟🌟🌟🌟

(5) திருவோத்துரில் ஆண்பனையைப் பெண்பனை🌴 ஆக்கினார்.

🌟🌟🌟🌟🌟🌟🌟

(6) மதுரையில் தான் தங்கியிருந்த மடத்திற்கு கூன்பாண்டியன் வைத்த நெருப்பை🔥அவருக்கே வெப்பு நோயாகப் பற்றச் செய்து, அவர் மனைவி மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் வேண்ட அந்த நோயும், அவர் கூனும் நீக்கி அவரை 'நின்றசீர் நெடுமாறன்'😇 ஆக்கினார்.

🌟🌟🌟🌟🌟🌟🌟

(7) மயிலாப்பூரில் குடத்தில் சாம்பலாக இருந்த பூம்பாவை என்னும் பெண்ணை👩🏻உயிருடன் வரச் செய்தார்



No comments:

Post a Comment