திருமந்திரம் -- முதல் தந்திரம் -- இளமை நிலையாமை:
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசி பையும் பறக்கின்ற வாறே.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
விளக்கம்: உடலாகிய இந்த பையினுள் புலங்களாகிய ஐந்து ஊசிகள் உள்ளன (கண்👁, வாய்👄, மூக்கு👃🏿, செவி👂🏽, தோல்). இப்புலங்கள் அனைத்தும் தன் விருப்பத்திற்கு பறக்கின்ற பறவைகள் போலவே.
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
வெயில் காலத்தில் தன் ஆசைக்கேற்ப அங்கும் இங்கும் பறக்கும் பறவைகள்🕊🕊, பனிக்காலத்தில் பறந்து செல்ல வழியின்றி கூட்டுக்குள்ளே நடுங்கிக்கொண்டு🥶 இருக்கும்.
---------------------------------
அதுபோல
---------------------------------
இளமைக் காலங்களில் ஆசைகளில் வயப்பட்டு ஐந்து புலங்களையும் அதன் விருப்பத்திற்கு ஏற்ப பறக்கவிட்டால் பின்பு வயதாகி முதுமை👴🏼 வந்தபிறகு இறைவனை அடைய எண்ணம் இருந்தாலும் குளிர் காலம் நீடித்து கூட்டிற்கு உள்ளேயே பறவை இருந்து இறந்து போவது போல, ஐந்து புலங்களும் செயல் இழந்து உடலுக்குள்ளையே இருந்து இறைவனை அடைய முடியாமல் அழிந்து விடும்🤕
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
கருத்து: உயிரோடும் இளமையோடும் இருக்கும்போதே ஆசை செல்லும் வழியில் புலன்களைச் செலுத்தாமல்🚫🚫 அவைகளைக் கட்டுப்படுத்தி இறைவனின் மேல் அன்பினை ஏற்படுத்தி அவரை அடையும் வழிகளைத் தேடி அடைய வேண்டும்.
💐💐💐💐💐💐💐💐💐
No comments:
Post a Comment