Search This Blog

Tuesday, 15 September 2020

திருவாசகத்தின் 16வது வாசகம்

 திருவாசகம் -- சிவபுராணம் -- 16வது வாசகம்🌺

------------------------

ஆராத இன்பம் அருளுமலை போற்றி

------------------------

விளக்கம்: இவ்வுலகமும்🌍, இவ்வுலக வாழ்க்கையும்🏡 நிரந்தரம் அல்ல.  அவ்வாறு இருக்கும் வகையில் நம்மால் அதிலிருந்து நிரந்தரமான இன்பம்😀 பெற  இயலாது.

-------------

உதாரணம்

-------------

💮நமக்கு விருப்பமான உணவு🧀🍞 சாப்பிடும் பொழுது இன்பம் உண்டானால் அதை உண்டு முடித்தப் பின் துன்பம்😓 ஏற்படும்

⭐⭐⭐⭐⭐

💮நம் உறவினர்களோடு👨‍👩‍👧‍👦, நண்பர்களோடு இருக்கும் பொழுது நமக்கு இன்பம் ஏற்பட்டால் அவர்கள் நம்மைப் பிரியும் பொழுது துன்பம்😓 ஏற்படும்

⭐⭐⭐⭐⭐

நம்மிடம் செல்வம்💵💵 சேரும் பொழுது இன்பம் உண்டானால் அந்த செல்வம் நம்மைவிட்டு நீங்கும் பொழுதும், நம்மைவிட்டு நீங்கிவிடுமோ என்ற எண்ணத்தின் பொழுதும் துன்பம்😓 உண்டாகும்

⭐⭐⭐⭐⭐

ஒரு நகைச்சுவைக்குக் கூட நம்மால் ஒரு அளவிற்கே சிரிக்க இயலும்

⭐⭐⭐⭐⭐

இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்

---------------

ஆனால் துன்பமே இல்லாத முடிவில்லாத பேரின்பத்தை (ஆராத இன்பம்) அருளுபவர் சிவபெருமான் ஆவார்😇.  அவரின் திருவடிகளைப் பற்றுவதே முடிவில்லா இன்பத்திற்கான வழியாகும்

💐💐💐💐💐



No comments:

Post a Comment