மூட்டைகள் என்று இங்கு சொல்லப்படுவது நாம் கொண்டிருக்கும் ஆசைகளே ஆகும். நாம் எப்பொருள் மீதோ, எப்பதவியின் மீதோ ஆசையை வைத்தாலும் நாம் அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதிலே நம் மனம் இருக்குமே தவிர இறைவனைப் பற்றிய எண்ணம் இருக்காது.
ஒரு ஆசையை நிறைவேற்றினால் மற்றொரு ஆசை மனதில் வரும். இதனால் ஆசைகளின் வழியே செல்லும் பொழுது நம்மை அறிந்தும் அறியாமலும் பாவங்கள்👹👹 செய்ய நேரிடும். இவ்வாறு நாம் ஆசைகளின் வழியில் செல்லும் பொழுது சிவபெருமானை மறக்க இயலும்😔
⭐⭐⭐⭐⭐⭐
எனவே, சிவபெருமான் திருவருளாலே "தம் திருவடிகளைத் தவிர எமக்கு இந்த உலகில்🌍 வேறு எப்பொருள் மீதும் ஆசை வராதவாறு தாம் அருள் செய்ய வேண்டும்" என்று உண்மையாக வேண்டினால் நமக்கு சிவபெருமான் நல்வழியைக் காட்டுவார்😇.
-------------------------
எனவே, ஆசை இருக்கும் மனதில் சிவபெருமான் இருக்க மாட்டார்.
சிவபெருமான் இருக்கும் மனதில் ஆசைகள் இருக்காது.
--------------------------
No comments:
Post a Comment