Search This Blog

Friday, 25 September 2020

மாணிக்கவாசகர் கூறும் போர் கருவிகள்

திருவாசகம் -- திருப்படை எழுச்சி -- பாடல் 1:

*********

ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்

மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிமின் 

ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்

வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே

*********

விளக்கம்:

போருக்கு செல்லும் வீரர் பறையை🥁 அடித்துக் கொண்டு, குடையைக் கவித்துக்கொண்டு, கவசம் பூண்டு சென்று பகைப்படையை அழித்து🔱 ஊரைக் காத்துக்கொள்வர்.

----------------------

அதுபோல 

----------------------

நாமும் பிரணவ நாதமாகிய பறையை🥁 அடித்துக்கொண்டு (பிரணவம் முதலிய மந்திரங்களைக் கணித்தல்), அறிவாகிய குடையைக்☂️ கவித்துக்கொண்டு (அம்மந்திரங்களின் பொருளில் அழுந்துதல்), தூய்மையான திருநீறாகிய கவசத்தை அணிந்துக் கொண்டு சென்று, மாயையாகிய (மும்மலங்களுள் ஒன்று) படையை எதிர்த்து வென்று🔱 வானமாகிய ஊரைக் கைக்கொள்வோம் என்று அழைக்கின்றார்.

-----------------------

இவை அனைத்தும் சிவபெருமான் திருவருளாலே அவரை அடைவதற்கு உதவும் கருவிகள் என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார்😇



No comments:

Post a Comment