Search This Blog

Wednesday, 30 September 2020

திருவாசகம் -- திருச்சாழல் பதிகத்தின் வரலாறு:

 திருவாசகம் -- திருச்சாழல் பதிகத்தின் வரலாறு

💐💐💐💐💐💐💐💐💐

இலங்கையில் புத்த மதம் மேலோங்கி இருந்தது.  தில்லையம்பலத்தைப் பற்றி கேள்விப்பட்டு மன்னனும் புத்தபிட்சுக்களும் தில்லையில் தங்கள் மதத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தில்லைக்கு வந்தனர்😐.  அப்போது மன்னன்🤴🏻 தன் ஊமை மகளையும்👧🏻 அழைத்து வந்தார்.  வந்தவர்கள் தில்லையில் தங்கி "நாங்கள் சைவர்களோடு வாதம் செய்து புத்த மதத்தை நிலைநாட்ட வந்தோம்" என்று தில்லை அந்தணர்களிடம் கூறினார்கள்.  அந்தணர்கள் கலக்கமுற்றார்கள்😔.  அன்று இரவு தில்லை நடராசர் அந்தணர்கள் கனவில் தோன்றி "தில்லைக்கு தற்போது வந்திருக்கும் திருவாதவூரனை அழைத்து வாதம் செய்ய சொல்லுங்கள், அவன் வெல்வான்😇" என்று கூறினார். 

⭐⭐⭐⭐⭐⭐

அந்தணர்கள் மாணிக்கவாசகரிடம் சென்று இறைவன் கூறியதைக் கூறி வாதம் புரிய அழைத்து வந்தார்கள்.  வாதம் நடந்தது. புத்தர்கள் தோற்றனர்.  இதனைப் பொறுக்காது புத்தர்கள் மாணிக்கவாசகரைத் திட்ட🤬 ஆரம்பித்தார்கள்.  திருவாதவூரார் இறைவனை வேண்ட கலைமகள் புத்தபிட்சுக்களை ஊமைகளாக்கினாள்.  அதனைக் கண்ட மன்னன்🤴🏻 பேசுவோரை ஊமையாக்கும் ஆற்றல் இருந்தால், ஊமைகளைப் பேச வைக்கவும் இயலும் அல்லவா என்று எண்ணி மாணிக்கவாசகரிடம் மன்னன் தன் மகளைப்👧🏻 பேச வைக்குமாறு வேண்டினான்.  மாணிக்கவாசகர் இறைவனை வேண்ட அவரின் மகள் பேச தொடங்கினாள்.  இதைக் கண்ட அனைவரும் திருவாதவூரரிடம் பணிந்து சைவ மதத்திற்கு மாறினர்😇.  பின்பு அனைவருக்கும் பேசும் ஆற்றல் வந்தது.  மதம் மாறிய புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விக்கு மன்னனின் மகளையே பதில் சொல்ல வைத்தார்.  புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்னனின் மகள் கூறிய விடைகளே 'திருச்சாழல்' என்னும் பதிகமாக அமைந்தன.

⭐⭐⭐⭐⭐⭐

No comments:

Post a Comment