வாழ்க்கையின் நிலையாமையை மிகவும் எளிதாக திருமூலர் விளக்குகின்றார்
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
திருமந்திரம் -- யாக்கை நிலையாமை -- பாடல் 6:
⚘⚘⚘⚘
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
⚘⚘⚘⚘
விளக்கம்: உணவு சமைத்தற்கு வேண்டுவனவற்றை ஈட்டிக் கொணர்ந்து வைத்த தலைவர், சமைத்தாயின பின்பு அவ்வுணவை உண்டார்; பின் தன் இளம் மனைவியுடன் சுகமாக குலாவினார்; பின் இடது பக்கம் சிறிது வலிக்கின்றது என்று படுத்தார்; படுத்தவர் உயிரிழந்துவிட்டார்.
**********
வாழ்க்கை எந்த அளவிற்கு நிலைப்புத் தன்மை இல்லாதது என்று உணர்ந்து, என்றும் நிலைத்திருக்கும் சிவபெருமானை அவர் திருவருளாலே வணங்குவோமாக.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
No comments:
Post a Comment