திருமந்திரம் -- இரண்டாம் தந்திரம் -- சிவ நிந்தை:
------------------------
அப்பகை யாலே அசுரருந் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே
-------------------------
விளக்கம்:
🌟அறியாமையால் வரும் அகங்காரத்தால் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானுடன் பகைமை கொண்டு விரைவில் அழிந்து போனார்கள்.
---------------
🌟சிவபெருமானுடன் எந்த வகையான பகைமை கொண்டாலும் அவரை அடைய இயலாது.
---------------
🌟அது பொய்யான பகையாக இருந்தாலும் அதனால் வரும் தீமை ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருகி அழிக்கும்
*******
No comments:
Post a Comment