Search This Blog

Saturday, 10 October 2020

திருநாவுக்கரசர் கூறும் உண்மை

 ஐந்தாம் திருமுறை -- பதிகம் 90 -- பாடல் 5:

🌟🌟🌟🌟🌟

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்

நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்

ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து

காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே

🌟🌟🌟🌟🌟

விளக்கம்:

பூக்களைக்💐 கையில் கொண்டு சிவபெருமானின் திருவடிகளைப் போற்றுதலில்லாதவர்களும், நாவினைக்👅 கொண்டு இறைவன் திருநாமத்தை நவிலாதவர்களும் தத்தம் உடலுக்கே உணவு🍞🥦 தேடிச் சுழன்று இறுதியில் காக்கைக்கே தாம் இரையாகி ஒழிவர்.



No comments:

Post a Comment