திருமந்திரம் -- மூன்றாம் தந்திரம் -- சந்திர யோகம்:
********
எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலை போல ஏறி இறங்குமாந்
துய்யது குக்கத்துத் தூலத்த காயமே
*********
விளக்கம்:
-------------
எண்ணங்கள் தூல உடலில் இருந்து சூட்சும உடலுக்கு ஏறியும், சூட்சும உடலில் இருந்து தூல உடலுக்கு இறங்கியும் வரும். இது சந்திரனின் வளர்பிறை தேய்பிறை🌒🌔🌕 போன்று இருக்கும்.
சூட்சும உடல் தூய்மை அடைவதற்கு ஏற்ப தூல உடம்பும் தூய்மை அடையும்.
No comments:
Post a Comment