Search This Blog

Thursday, 15 October 2020

இறைவன் ஒருவரே!!

 ஐந்தாறு மொழிகளைப் பேசுகிற வியாபாரிகள் ஓர் இடத்தில் ஒன்று கூடினார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் அருகில் இருந்த பணியாளரிடம் பார்த்து தங்கள் மொழியிலேயே தண்ணீர்💧 கேட்டார்கள். 

⭐பானி லாவோ என்றார் ஒருவர். 

⭐தண்ணீர் கொண்டு வா என்றார் மற்றொருவர். 

இப்படியே அவரவர்கள் பேசிய வார்த்தைகள் வேறு வேறு மொழிகளில் கேட்டனர். பானி, வாட்டர், தண்ணீர், நீள்ளு என அனைவரின் மொழிக்கேற்ப வேறு வேறு ஒலிகள் அங்கு கேட்டது.

-----------------

அவர்கள் அனைவரும் பேசிய மொழிகளைத் தெரியாத ஒருவர் அங்கே இருந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வார்த்தைகளை சொல்லி ஒரு பொருளை கொண்டு வர சொன்னதை உணர்ந்தார். ஒவ்வொருவரும் வேறு பொருள்களைக் கொண்டு வரச் சொல்லுகிறார்கள் என்று எண்ணிக் 🤔கொண்டார். சிறிது நேரம் கழித்து அனைவருக்கும் தண்ணீரைக்💧 கொண்டு கொடுத்தார் பணியாள். ஒரே பொருளைத் தான் இவ்வளவு பேரும் கேட்டிருக்கின்றார்கள். வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாகக் கேட்டார்களே என்று ஆச்சரியப்பட்டார்😧 மொழி தெரியாதவர்.

🌟🌟🌟🌟🌟🌟

தண்ணீரின் பெயரை பல்வேறு மொழியில் சொல்லும் போது அது வெவ்வேறாகக் காதில் படுகிறது. ஆனால் அந்தப் பெயருக்கு உரிய பொருளைக் காணும்போது எல்லாம் ஒன்றுதான் என்று தெரியவருகிறது. தண்ணீர் ஒரு பொருளே அதனை அறிந்தவர்கள் அவர்களுக்கு புரிந்த மொழிகளில் சொல்கிறார்கள். அதுபோல கடவுளும் ஒருவரே அவரவர்களுக்கு கிடைத்த அனுபவத்தில் ஒரே கடவுளைப் பலரும் பல வகைகளில் வழிபடுகிறார்கள்😇. 

------------

கடவுளிடம் நெருங்க நெருங்க எல்லாக் கடவுளரும் ஒன்றே என்ற உண்மையை அனுபவத்தில் உணரலாம்.😊

------------



No comments:

Post a Comment