திருமந்திரம் -- இரண்டாம் தந்திரம் -- குரு நிந்தை💐💐
------------
பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே
-------------
விளக்கம்:
ஞானத்தை அறிந்த பெரியோர்களை மதிக்காத கீழான எண்ணமுடையவர்கள் அப்பெரியோர்களின் உடனிருப்பவர்களையும் வருந்தும்படி கீழ்மையாக பேசுபவர்கள்🤬 ஆகிய இவர்கள் ஞானமில்லாமல் கல்வியை👩🎓👨🏻🎓 மட்டுமே அறிந்தவர்களின் வழியில் சென்று ஞானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஞானத்தை அடைய முயற்சிப்பார்கள். ஞானத்தை அறிந்த பெரியோர்களால் கிடைக்காத ஞானம் வேறு யாரிடம் கிடைக்கும்?? என்று திருமூலர் உரைக்கின்றார்
No comments:
Post a Comment