Search This Blog

Wednesday, 21 October 2020

குருவை நிந்தித்தல் கூடாது

திருமந்திரம் -- இரண்டாம் தந்திரம் -- குரு நிந்தை:

*********

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய

சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்

ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்

பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே

**********

விளக்கம்:

--------------

'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை சீடனுக்கு உணர்த்திய குருவின் பெருமை குலையும்படி தவறாகப் பேசுகின்ற🤬 சீடர்கள் ஊர் சுற்றித் திரியும் நோயுள்ள நாயாகப்🐕 பிறந்து பின்னர் ஒரு யுகத்திற்குப் பூமியில் புழுவாக🐛 கிடப்பார்கள் என்று திருமூலர் கூறுகின்றார்.

--------------





No comments:

Post a Comment