Search This Blog

Thursday, 29 October 2020

பட்டினத்தார் பாடல்

பட்டினத்தாரின் பாடல்:
-------------
வாளால்‌ மக அரிந்து ஊட்ட வல்லேன்‌ அல்லேன்‌ 

மாது சொன்ன சூளால்‌ இளமை துறக்க வல்லேன்‌ அல்லேன்‌ 

தொண்டு செய்ய நாளாறிற்‌ கண்ணிடந்து அப்ப வல்லேன்‌ அல்லேன்‌ 

நானினிச்‌ சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தியப்பனுக்கே.
--------------
விளக்கம்🌸:
-----------
சிறுத்தொண்ட நாயனார்‌, சிவபெருமானின் அடியாரைத்‌ திருப்தி செய்ய தன்‌ மகனையே👦🏻 அறுத்து கறி சமைத்தார்‌.
🌟🌟🌟🌟🌟
திருநீலகண்ட நாயனாரின்‌ மனைவியின்‌ சொல்லால்‌, அவர்‌ இன்பத்தைத்‌ துறந்தார்‌. 
🌟🌟🌟🌟🌟
கண்ணப்ப நாயனார்‌ தனது கண்ணை👁 சிவபெருமானுக்கு வழங்க சிறிதும் தயங்கவில்லை. இப்படி எல்லாம்‌ என்னால்‌ செய்ய இயலாதே என்று பாடுகிறார்‌ பட்டினத்தார்‌.
---------------
பட்டினத்தார் சிறந்த சிவபக்தரும், துறவியும் ஆவார். அவ்வாறு இருக்கும் அவரே இவ்வாறு தனது சிறுமையைக் கூறுகிறார் என்றால் நமது நிலையை எண்ணிப்🤔 பார்க்க வேண்டும்.
--------------
நாம் செய்யும் செயல்களைக் கொண்டு நாமும் பெரிய பக்தி உடையவர்கள் என்று எண்ணுதல் கூடாது🚫 என்பதை இப்பாடல் உணர்த்துகின்றது.


No comments:

Post a Comment