Search This Blog

Sunday, 1 November 2020

தாயுமானவர் பாடல்

கல்லால்‌ எறிந்தும்‌ கைவில்லால்‌ அடித்தும்‌ கனிமதுரச்‌ 

சொல்லால்‌ துதித்தும்நற்‌ பச்சிலை தூவியும்‌ தொண்டரினம்‌ 

எல்லாம்‌ பிழைத்தனர்‌ அன்பற்ற நான்‌ இனி ஏதுசெய்வேன்‌!

கொல்லா விரதியர்‌ நேர்நின்ற முக்கட்குருமணியே! 


- தாயுமானவர்‌ 

---------------------------

விளக்கம்:

---------------------------

⭐கல்லால்‌ அடித்து சிவபெருமானின் அருள்‌ பெற்றவர்‌ -சாக்கிய நாயனார்‌. இவர்‌ முதலில்‌ புத்தமதத்தைத்‌ தழுவி பின்னர்‌ சைவ மதம்‌ திரும்பியதும்‌, புத்த மதத்தினரைத்‌ திருப்தி செய்வதற்காக சிவலிங்கம்‌ மீது கல்லெறிந்தார்‌. வெளியில்‌ இப்படி வன்முறை காட்டினாலும்‌ மனத்தகத்தே சிவபெருமான்‌ மீது அன்புகொண்டார்‌♥️. 

💐💐💐💐

⭐வில்லால்‌🏹 அடித்து பாசுபதாஸ்த்தரம்‌ பெற்றவன்‌ அர்ஜுனன்‌. 

💐💐💐💐

⭐கனிமதுரச்‌ சொல்லால்‌ துதித்தவர்கள்‌🎶 தேவார, திருவாசக நால்வர்‌ ஆவர்‌.

💐💐💐💐

⭐பச்சிலை🌿 தூவி வழிபட்டவர்‌ கண்ணப்பநாயனார்‌. 

💐💐💐💐

இவர்களுக்கு இணையான அன்பு எனக்கில்லையே என்று வருத்தப்‌படுகிறார்‌😔 தாயுமானவர்‌.



No comments:

Post a Comment