Search This Blog

Tuesday, 10 November 2020

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

திருமந்திரம் -- ஏழாம் தந்திரம் -- இதோபதேசம் -- பாடல் 3:

🌟🌟🌟🌟

ஒன்றே குலமும்‌ ஒருவனே தேவனும்‌ 

நன்றே நினைமின்‌ நமனில்லை நாணாமே

சென்றே புகுங்கதி மில்லை நும்‌ சித்தத்து 

நின்றே நிலைபெற நீர்நினைந்‌ துய்மினே. 

🌟🌟🌟🌟

விளக்கம்:

----------------

உலகத்தார்‌ பல சாதிகளைக்‌🕉✝️☪️✡ கூறுவராயினும்‌ உண்மையில்‌ உள்ளது ஒரு சாதியே. உலகத்தார் பல கடவுளர்களைக்‌ கூறிக்‌ கொண்டாடுவராயினும்‌ உண்மையில்‌ உள்ள கடவுள்‌ ஒருவரே. இவற்றை நாம் முதலில்‌ நன்றாக உணர வேண்டும் . உணர்ந்தால்‌, நமனும்‌ நம்மை அணுகான்‌😇; வெட்கமின்றி முன்முன்‌ பிறந்து இறந்த பிறப்புகளிலே மீண்டும்‌ மீண்டும்‌ பிறக்கும்‌ நிலையும்‌ நமக்கு இல்லையாகும்‌. அப்பால்‌ மேற்கூறிய உண்மைகள்‌ நாம் உள்ளத்தில்‌ அசையாது நிலைபெற, அதன்வழிப்‌ பின்னர்ச்‌ சிவபெருமானை இடையறாது நினைந்து உய்தி பெறுதல் வேண்டும்.




No comments:

Post a Comment