திருவாசகம் -- அச்சோப் பதிகம் -- பாடல் 2:
🌟🌟🌟🌟
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.
------------------
விளக்கம்:
------------------
நெறியல்லா நெறியாவது, சிவபெருமானை நினையாது பிறவற்றை👑💴💰 நினைக்கின்ற நெறி. திருவருள் நெறியாவது, அவரை🕉 நினைந்து அவர் அருள் வழி நிற்கின்ற நெறி. இறைவனது அருள் விளையாடலாவது - ஐந்தொழில்கள். அறிவித்தலாவது, அவற்றின் உண்மையை - அஃதாவது, ஐந்தொழில்கட்கும் அவரே முதல்வன் என்பதையும் படைத்தல் முதலியவற்றில் ஒவ்வொன்றைச் செய்வோர் அவர் ஆணைவழி நிற்கும் அதிகாரிகள் எனவும் உணரச்செய்தல். உருவமேயில்லாத பெருமான் தமக்கு உண்மையினை விளக்கும்பொருட்ரு உருவு கொண்டு எழுந்தருளியாட்கொண்டான் என்று வியக்கிறார்.
🌟🌟🌟🌟
இதனால், இறைவன் உண்மை நெறியைக் காட்ட வல்லவன் என்பது கூறப்பட்டது.
No comments:
Post a Comment