திருவாசகம் -- சிவபுராணம் -- 25ஆம் வாசகம்:
================
🌟பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்🌟
================
விளக்கம்:
------------
பல வினைகள் செய்த நான் பரம்பொருளாகிய இறைவனை எவ்வாறு புகழ்வது என்பதை அறியவில்லை🤐 என்று மாணிக்கவாசகர் கூறுகிறார்.
--------------------
இவ்வாறு கூறுவதற்கு காரணம்:
--------------------
தாய்👩🏼, தன் குழந்தை👶🏻 உண்பதற்காக🍼 நிலாவைக் காட்டி தன் வாயைத் திறப்பாள். குழந்தை தன் தாயைப் பார்த்து அதன் வாயைத் திறக்கும். பிறகு உணவைக் குழந்தைக்கு ஊட்டுவாள்.
------------
அதுபோல
------------
மாணிக்கவாசகர் 'பொல்லா வினையேன்' என்று தன்னைக் கூறவில்லை. அவர் அவ்வாறு கூறினால் நாமும் அவரைப் பார்த்து அவ்வாறு கூறும் போது நமது ஆணவம் நீங்கி, இறைவனின் பெருமையை உணர்ந்து இறைவனிடம் சரணடைந்து அவரை அடையலாம் என்பதற்காகவே கூறுகிறார்😇.
**********
No comments:
Post a Comment