Search This Blog

Tuesday, 3 November 2020

இறைவன் நமக்குள்ளே இருக்கின்றார்

ஆன்மீக நிலையை வைத்து இன்றைய மக்களிடம் குழப்பங்கள்‌ அதிகமாக உள்ளது ஏன்‌? 

------------------

1️⃣முதலில்‌ இறைவன்‌ வெளியே இல்லாதவன்‌ என்று உணர வேண்டும்‌. 

2️⃣இரண்டாவதாக அவர் நமக்குள்‌ இருக்கின்றான்‌ என்பதை உணர வேண்டும்‌. 

3️⃣மூன்றாவதாக அவர் நம்மை விட்டு பிரியாமல்‌ இருக்கின்றான்‌ என்பதை உணர வேண்டும்‌. 

4️⃣நான்காவதாக அவர் தேவையற்றவன்‌ என்பதை உணர வேண்டும்‌. 

------------------

அன்புடன்‌ அவரை பார்த்தால்‌😍 அன்பு அது பக்தியாய்‌ மாறி,  பக்தியது பெரும்‌ வெள்ளமாய்‌🌊 பெருகி அந்த பரவசத்தில்‌ நாமும்‌ அமர இறைவனை உறுதியாக காண முடியும்‌. அடிப்படையில்‌ இறைவனை வெளியில்‌ பார்ப்பதை விட வேண்டும்‌ என்பது விதியாகும்‌. ஏனெனில்‌ இறைவன்‌ நம்மை விட்டு பிரிந்ததில்லை, இறைவன்‌ நம்முடன்‌ இருக்கின்றான்‌ என்பதை நாம்‌ உணர்வதில்லை. இதனை அவ்வப்பொழுது சிந்தனையில்‌ வைக்க வேண்டும்‌. 

            ரூபம்‌ இல்லாத இறைவன்‌ நம்முடைய இயலாமையால்‌ ரூபத்தை கொடுக்கின்றான்‌. ரூபமாய்‌ இருக்கும்‌ இறைவனை சிறிது தூரத்தில்‌ பார்த்து நாம்‌ வேறு இறைவன்‌ வேறு என தவறாகப்‌ புரிந்து நமக்கும்‌ இறைவனுக்கும்‌ உள்ள தூரத்தை அதிகரித்ததால்‌ இக்காலத்தில்‌ வேதனை😑 காண்கின்றோம்‌ என்பதே உண்மையான நிலை. இதை தவிர்க்க வேண்டும்‌ என்றால்‌ 'எமக்குள்‌ இருக்கும்‌ இறைவா' என்கின்ற வாக்கியத்தை எப்பொழுதும்‌ நம் வழிபாட்டில்‌ சேர்த்துக்‌ கொண்டால்‌ இது நாளடைவில்‌ பெருகி உண்மையாக மாறி அந்த உண்மையை உணரச்செய்யும்‌. 

            இன்று முழுமையாக தவம்‌ செய்தோம்‌ இறைவனை காணவில்லை என எண்ண வேண்டாம்‌. ஏனெனில்‌ நாம் தியானம்‌ செய்தது வெளியில்‌ இருக்கும்‌ இறைவனை,  உள்ளிருக்கும்‌ இறைவனை அல்ல. உள்‌ சென்று ஹிருதய ஸ்தானத்தில்‌ இறைவன்‌ இருப்பதாக எண்ணி அந்த இடத்தை சுத்தமாக வைக்க வேண்டும். இறைனுக்கு பாத நமஸ்காரங்கள்‌ செய்வது ஒன்றே போதுமானது.

இவ்வாறு செய்து வந்தால் இறையருளைப் பெறலாம்😇.



No comments:

Post a Comment