திருமந்திரம் -- நான்காம் தந்திரம் அசபை -- பாடல் 4:
--------------
ஆமே பொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத் தாண்டவம்
ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
ஆமே சங்காரத் தருந்தாண் டவங்களே.
--------------
விளக்கம்:
***********
உலகத்திலுள்ள அனைவருக்கும் பொதுவான இறை சக்தி வீற்றிருக்கும் தென் நாட்டு சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலம் இறைவனின் ஐந்து5️⃣ வகையான திருக்கூத்துக்களை (நடனம்) காட்டி நிற்கின்றது.
---------
அவை
---------
1️⃣ அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உயிர்களையும் படைக்கின்ற - அற்புத தாண்டவம்
⭐⭐⭐⭐⭐
2️⃣ அந்த உயிர்களில் உண்மை ஞானம் பெற்றவருக்கு பேரின்பத்தைக் கொடுக்கும் - ஆனந்த தாண்டவம்
⭐⭐⭐⭐⭐
3️⃣ அனைத்து உயிர்களின் வாழ்க்கை முழுதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு மூச்சாய் உயிராய் இயங்குகின்ற - அனவரத் தாண்டவம்
⭐⭐⭐⭐⭐
4️⃣ அவற்றின் விதி முடியும் போது உலக வாழ்க்கையை அழித்து அருளுகின்ற - சங்காரத் தாண்டவம்
⭐⭐⭐⭐⭐
5️⃣ உலகங்களையும் அதிலிருக்கும் உயிர்களையும் முற்றாக அழித்துத் தம்மோடு மீண்டும் சேர்த்துக்கொள்ளும் ஊழிக்காலப் - பிரளயத் தாண்டவம்
⭐⭐⭐⭐⭐
ஆகிய பெருமை வாய்ந்த ஐந்து தாண்டவங்களே ஆகும்.
No comments:
Post a Comment