பரமேஸ்வரர் பூமியை🌍 வலம் வந்து கொண்டிருந்தார். அவரைச் சுமந்து கொண்டு நந்தி மூன்று உலகங்களுக்கும் சென்றார். அப்படிச்செல்கையில் அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது: “மூன்று உலகங்களையும்🌍 தாங்குகிற இறைவனை நான் சுமக்கிறேன் " என்ற ஆணவம் தலையெடுத்தது🤕. இது தொண்டனுக்கு ஒவ்வாது. பக்தனுக்குப் பாடம் புகட்டக் கடவுள் எண்ணினார். தம் ஜடாபாரத்திலிருந்து ஒரு முடியைப் பிடுங்கித் தான் அமர்ந்திருந்த விடையின்மீது வைக்க, அந்த ஒரு ஜடாமுடியின் பாரத்தைத்😰 தாங்க முடியாமல் திணறிய நந்தி ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாமல் நான்கு கால்களையும் பரப்பிக்கொண்டு நாக்குத்தள்ளியபடி🥵 அந்த இடத்திலேயே கிடந்தார்.
----------------
மொத்த ஜடாமுடியையும் சுமக்கும் போது பாரம் இல்லை. ஆணவம் தலையெடுத்தபோது (அதாவது இறைவனை விட்டுப்பிரிந்தபோது) அதில் ஒரு முடியைக் கூடச் சுமப்பதற்குக் கஷ்டமாகிவிட்டது.
-----------------
நாம் உணர வேண்டிய கருத்து🙂:
************
“அவனன்றி ஓர் அணுவும் அசையாது ” என்பது ஆப்தமொழி. தன்மூலம் நிகழ்வது தன்னுடைய செயல் என்று நினைப்பது மனிதனுடைய ஆணவம்🤕. இந்த எண்ணமே மனிதன் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம். பக்தனின் ஆணவத்தை நீக்கி தன்மயமாக்கிக் கொள்வது சிவபெருமானின் தனிச்செயல்😇.
************
No comments:
Post a Comment