திருவாசகம் -- திருப்பூவல்லி -- பாடல் 3:
🌹🌹🌹🌹🌹
நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத்
தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான்
மாயப் பிறப்பறுத் தாண்டான்என் வல்வினையின்
வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ.
🌹🌹🌹🌹🌹
விளக்கம்:
==========
தாய்👩👧 ஒரு பிறவியில் கருணை காட்டி உதவுபவள்; இறைவனோ, எல்லாப் பிறவிகளிலும் தோன்றாத் துணையாய் இருந்து கருணை காட்டி உதவுபவர். ஆதலின், "தாயிற் பெரிதுந் தயாவுடைய தம் பெருமான்" என்றார். குருவருளால் பழவினைகள் செயலற்று ஒழிந்தமையின், "வினையின் வாயிற்பொடியட்டி" என்று நகைச்சுவைபடக் கூறினார்😇.
================
இதனால், இறைவன் அருளால் வினைகள் அழியும் என்பது கூறப்பட்டது.
================
No comments:
Post a Comment