Search This Blog

Saturday, 13 February 2021

அசைவம் சாப்பிடாமல் இருத்தல்

திருமந்திரம் -- முதல் தந்திரம் -- புலான் மறுத்தல்

(அசைவம்‌ சாப்பிடாமல்‌ இருத்தல்‌] 

🌻🌻🌻🌻🌻

கொலையே களவுகள்‌ காமம்‌ பொய்கூறல்‌ 

மலைவான பாதக மாம்‌அவை நீக்கித்‌ 

தலையாஞ்‌ சிவனடி சார்ந்தின்பஞ்‌ சார்ந்தோர்க்‌ 

கிலையாம்‌ இவைஞானா னந்தத்‌ திருத்தலே

🌻🌻🌻🌻🌻

விளக்கம்‌

***********

1️⃣ பிற உயிர்களைக்‌ கொல்லுதல்‌🔪


2️⃣ பிறரின்‌ பொருட்களைத்‌ திருடுதல்‌


3️⃣ புத்தியை மயக்கும்‌ கள்ளை குடித்தல்‌ (மது அருந்துதல்‌🍺)


4️⃣ பெண்களின்‌ மேல்‌ காம வயப்படுதல்‌ 


5️⃣ பொய்‌ பேசுதல்‌ 


ஆகிய இந்த ஐந்தும்‌ உயிர்கள்‌ செய்யக்கூடிய பாவங்களிலேயே மிகவும்‌ பெரிய பாவங்களாகும்‌. 

இந்த பாவங்களைச்‌ செய்யாமல்‌ இறைவனது திருவடிகளைத்‌ தனது சிந்தனையில்‌ வைத்து இறைவனைப்‌ பற்றிய எண்ணங்களிலேயே திளைத்து இருப்பவர்களுக்கு, பேரறிவு ஞானத்தினால்‌ விளங்கும்‌ பேரின்பம்‌ எப்போதும்‌ கிடைக்கும்‌.



No comments:

Post a Comment