Search This Blog

Saturday, 6 March 2021

இறைவன் பேரின்பத்தை அருள்வார்

திருவாசகம் -- அச்சோப் பதிகம் -- பாடல் 3:

🌸🌸🌸🌸🌸🌸

பொய்யெல்லாம்‌ மெய்யென்று புணர்முலையார்‌ போகத்தே 

மையலுறக்‌ கடவேனை மாளாமே காத்தருளித்‌ 

தையலிடங்‌ கொண்டபிரான்‌ தன்கழலே சேரும்வண்ணம்‌ 

ஐயன்‌எனக்‌ கருளியவா றார்பெறுவார்‌ அச்சோவே

🌸🌸🌸🌸🌸🌸

விளக்கம்:

==========

பொய்யை மெய் என்று கருதி மாதர்‌ இன்பத்தில்‌ மயங்கி நின்ற நம்மை, அழியாமல்‌ காத்தருளித்‌ தனது திருவடியை அடைந்து பேரின்பம் நுகருமாறு  இறைவன்‌ அருள்‌ பாலித்தார். 

============

இறைவன் பேரின்பத்தை அருள வல்லவர் என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார்.



No comments:

Post a Comment