Search This Blog

Thursday, 25 March 2021

சிவபெருமானின் திருவடி பெருமை

 *திருவாசகம் -- திருக்கோத்தும்பி -- பாடல் 1*

🌻🌻🌻🌻🌻🌻

பூவேறு கோனும்‌ புரந்தரனும்‌ பொற்பமைந்த 

நாவேறு செல்வியும்‌ நாரணனும்‌ நான்மறையும்‌

மாவேறு சோதியும்‌ வானவருந்‌ தாமறியாச்‌

சேவேறு சேவடிக்கே சென்றூதாய்‌ கோத்தும்பீ.

🌻🌻🌻🌻🌻🌻

*விளக்கம்*

===========

அரசவண்டே! நீ, பிரமன்‌, இந்திரன்‌, சரசுவதி, திருமால்‌, நான்கு வேதங்கள்‌, முச்சுடர்கள்‌, மற்றைத்‌ தேவர்கள்‌, ஆகிய எல்லாரும்‌ அறிய இயலாத இடபவாகனனாகிய சிவபெருமானது திருவடியிற்‌ சென்று ஊதுவாயாக என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார்.

--------------------

இவ்வாறு மாணிக்கவாசகர், *இறைவன் திருவடியின் பெருமையை* இப்பாடலில் கூறுகின்றார்.



No comments:

Post a Comment