Search This Blog

Sunday, 25 April 2021

இறைவன், அந்தணராக வருதல்:

 "திருக்குருகாவூர்‌(வெள்ளடை) திருமுறை பதிகம்‌" 

---------------

"இத்தனை யாமாற்றை அறிந்திலேன்‌ எம்பெருமான்‌" எனத்‌ தொடங்கும்‌ திருப்பதிகம்‌ -"சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌" அருளிச்செய்தது. 

சுந்தரர்‌ தனது தொண்டர்‌ கூட்டத்துடன்‌ சீர்காழியிலிருந்து இவ்வூருக்கு எழுந்தருளுகையில்‌ தாகமும்‌, பசியும்‌ அவரையும்‌ அவர்‌ தொண்டர்‌ கூட்டத்தினரையும்‌ வருத்திற்று😞. இறைவர்‌ அந்தணர்‌ உருவம்‌ கொண்டு வழியில்‌ தண்ணீர்ப்பந்தல்‌ ஏற்படுத்தி அவர்களுக்குத்‌ தண்ணீரும்‌ கட்டமுதும்‌🍚 அளித்தார்‌. சுந்தரர்‌ உண்டு உறங்குகையில்‌😴 இறைவர்‌ பந்தலோடு மறைந்தருளினார்‌. சுந்தரர்‌ தூக்கத்தினின்று எழுந்து "இத்தனையாமாற்றை யறிந்திலேன்‌" எனத்‌ தொடங்கும்‌ பதிகம்பாடி கோயிலுக்குச்சென்று இறைவனை வழிபட்டார்‌.



No comments:

Post a Comment