Search This Blog

Friday, 30 April 2021

இறைவனது திருவடிகளை விரும்ப வேண்டும்

 திருவாசகம் -- யாத்திரைப் பத்து -- பாடல் 2:

----------------

புகவே வேண்டா புலன்களில்நீர்‌ 

புயங்கப்‌ பெருமான்‌ பூங்கழல்கள்‌

மிகவே நினைமின்‌ மிக்கவெல்லாம்‌ வேண்டா போக விடுமின்கள்‌ 

நகவே ஞாலத்‌ துள்புகுந்து 

நாயே அனைய நமையாண்ட 

தகவே யுடையான்‌ தனைச்சாரத்‌ 

தளரா திருப்பார்‌ தாந்தாமே.  

-----------------

விளக்கம்:

=========

உலகில்‌🌏 எழுந்தருளி நாயைப்‌🐕 போன்ற நம்மை ஆட்கொண்ட பெருமையையுடைய இறைவனை அடைந்தால்‌ அவரவர்‌ தளர்ச்சி நீங்கி இருப்பார்கள்‌. ஆதலின்‌ அடியவர்களே! நீங்கள்‌ ஐம்புல👁👂🏻👅 விடயங்களில்‌ செல்ல வேண்டா. பாம்பணிந்த பெருமானுடைய தாமரை மலரை ஒத்த திருவடிகளை மிகுதியாக நினையுங்கள்‌.

எஞ்சியவையெல்லாம்‌ நமக்கு வேண்டா. அவைகளை நம்மிடத்திலிருந்து நீங்கும்படி விட்டு விடுங்கள்‌ என்று மாணிக்கவாசகர் கூறுகிறார்.

⭐️⭐️⭐️⭐️⭐️

இதனால் இறைவன் திருவடியை விரும்ப வேண்டும் என்பது கூறப்பட்டது.


No comments:

Post a Comment