🌼🌼🌼🌼🌼
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கு மாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே.
🌼🌼🌼🌼🌼
விளக்கம்:
நாம் இறந்த பின்னர் பேரின்ப வீடு அளித்து நமக்கு அருளும் தில்லைச் சிற்றம்பலவன், பொன் அளித்து நம்மை இம்மையிலும் காக்கின்றார். அத்தகைய சிவபிரானை, மறுபடியும் மறுபடியும் கண்டு களிக்க, எனக்கு மனிதப் பிறவியினை மீண்டும் மீண்டும் அளிப்பாரோ? என்று திருநாவுக்கரசர் இறைவனிடம் வேண்டுகின்றார்.
No comments:
Post a Comment