மூன்றாம் தேவாரம் -- பதிகம் 125 -- பாடல் 3:
✨✨✨✨✨
அன்புறு சிந்தைய ராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்று
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்
துன்புறு வார்அல்லர் தொண்டு செய்வாரே.
✨✨✨✨✨
விளக்கம்:
⭐️⭐️⭐️⭐️
திருஞானசம்பந்தர் நிறைவாகப் பாடிய கல்லூர்ப் பெருமணம் என்ற பதிகத்துள் மூன்றாம் பாடலில் கருத்தை நோக்குக.
நன்மை எல்லாம் பொருந்தியுள்ள நல்லூர்ப் பெருமணத்தில் பொருந்தி நின்று இன்புறும் எந்தை ஆச்சாள்புரம் சிவலோகத் தியாகராசர் அவரது இணை அடிகளை அன்புறு சிந்தையராய்
1) மனத்தால் நினைப்போரும்
2) வாக்கினால் ஏத்தித் துதிப்போரும்
3)காயத்தால் தொண்டு செய்வோரும்
மனம் வாக்கு காயம் ஆகிய முக்கரணங்களாலும் பெருமானை வழிபடுவோரும் துன்புறார்.எனவே இன்புறுவர் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment