கலியுகத்தில் சிறு சிறு பொய்கள் கூற வேண்டிய ஓர் நிலை உள்ளது இதிலிருந்து நாம் எவ்விதம் மீள்வது?
வார்த்தை என்பது நம்முடையதாகும். இது மற்றவர்களுடையது அல்ல இவ்வார்த்தையை நாமே கூறி அதனை நாமே பொய்யாக்கி வாழ்வதன் அவசியம் என்ன? இருப்பதை இருக்கும்படி கூறினால் துவக்கத்தில் சிறிது கஷ்டமாக🥵 இருக்கும் என்ற போதிலும் அனைவர்களிடமும் இது ஒரு பெரும் விசுவாசத்தை (நம்பிக்கை) ஏற்படுத்தும். இதனை சிந்தித்து🤔 ஆரம்ப காலத்தில் பொய்மையை தவிர்த்தல் வேண்டும். பொய்யானது ஒன்று கூறிட அதனை மூடி மறைக்க பல பொய்களை கூற வேண்டிய நிலையும் காண்பீர்கள். இத்தகைய நிலையில் வாழ்க்கை பொய்யாகி விடும் என்பதை மனதில் வைத்து திருத்தங்கள் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment