Search This Blog

Friday, 2 July 2021

ஏழாம் திருமுறை -- பதிகம் 23 -- பாடல் 2:

 ⭐️⭐️⭐️⭐️⭐️

எங்கேனும்‌ இருந்து உன்‌ அடியேன்‌ உனை நினைந்தால்‌ 

அங்கே வந்து என்னொடும்‌ உடனாகி நின்றருளி 

இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும்‌ 

கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.

⭐️⭐️⭐️⭐️⭐️

விளக்கம்

------------

"திருக்கழிப்பாலையில்‌ விரும்பி எழுந்தருளி இருக்கின்றவனே, நீயே உன்‌ அடியவனாகிய யான்‌ இப்பூமியிலே எங்காயினும்‌ இருந்து உன்னை நினைத்தால்‌, அங்கே வந்து என்னோடு கூடி. நின்று, என்‌ வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகனே" என்று சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானின் புகழைப் பாடுகிறார்.



No comments:

Post a Comment