எங்கும் நிறைபொருளே, நீ என் உள்ளும் புறமும் ஓயாது ஒளிர்கின்றாய், என் உள்ளத்தினுள் உன்னை நான் உணர நீ அருள் புரிவாயாக.
உள்ளம் ஒழுங்காயிருப்பவர்க்கு உலகெலாம் ஒழுங்குடையதாய்த் தென்படுகிறது. உள்ளம் கேடடைந்தால் உலகமெல்லாம் கேடுடையதாய்க் காட்சி கொடுக்கிறது. உள்ளத்தை ஒழுங்குபடுத்துதல் ஒன்றே நம் கடமை. உள்ளம் தூயதாகுமளவு புறமும் நமக்குத் தூயதாகத் திகழும்.
No comments:
Post a Comment