Search This Blog

Thursday, 26 August 2021

Lord Shiva & Lingam - சிவபெருமானும் லிங்கமும்

✨நேபாளத்தின் பக்தாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சூர்ய விநாயக் கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவபெருமான் மற்றும் சிவலிங்கம்✨

-----------------

🌟Statue of Lord Shiva and Lingam carved on a single rock in Surya Vinayak Temple, Bhakthapur District, Nepal🌟


Thursday, 12 August 2021

கவலையைக் கொண்ட நம் வாழ்க்கை

ஓயாதோ என்கவலை உள்ளே ஆனந்தவெள்ளம்‌ 

பாயாதோ ஐயா பகராய்‌ பராபரமே. 

                                  -தாயுமானவர்


விளக்கம்‌: 

⭐️⭐️⭐️⭐️⭐️

கவலையுற்றிருப்பது😔 ஜீவாத்மாக்களின்‌ இயல்பு. பிரபஞ்ச வாழ்க்கையில்‌ ஈடுபட்டிருக்கும்‌ வரையில்‌ கவலைக்கு ஒரு முடிவு இல்லை. பிறவிதோறும்‌ கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்ற மானுடன்‌ பரமனை நாடிக்‌ கவலைப்படுவானாகில்‌ அவன்‌ பாக்கியவானாகிறான்‌. கடலில்‌ அலைகள்‌🌊 எழுவது போன்று உள்ளத்தில்‌ கவலைகள்‌ எழுந்துகொண்டிருக்கின்றன. அவைகள்‌ உள்ளத்தினுள்ளே இருக்கின்ற பேரானந்தத்தை மறைக்கின்றன. அத்தகைய கவலையை ஒழித்துத்‌ தள்ளுவது மிகக்‌ கடினம்‌☹️. ஒதுக்குதற்குப்‌ பதிலாக உலகக்‌ கவலைகளை அருள்துறைக்கு உரிய கவலையாக மாற்றுவது மிகச்‌ சுலபம்‌. அதுவும்‌ கவலைதானே என்னும்‌ ஐயம்‌ எழலாம்‌. ஆனால்‌ கடவுளைக்‌ குறித்துக்‌ கவலைப்படுகின்ற அதே வேளையில்‌ ஆனந்தமும்‌😇 உருவெடுக்கின்றது. இதை ஆத்மசாதகன்‌🧘🏻‍♂ தன்‌ அனுபவத்தில்‌ கண்டுகொள்ள முடியும்‌.



Life full of distress

Will not my distress end? 

Will not the Waters of Bliss flow into me? 

My Lord, 

Oh Para Param! 

                              -Thaayumanavar


Explanation:

⭐️⭐️⭐️⭐️⭐️

The jiva which is entangled in this worldly always suffers from misery😔. And this misery has no end till the worldly life ends. He who suffers in this worldly life to reach the holy feet of God is really blessed😇. Like the waves🌊 which arise in the sea, endless misery arise in all our minds. These obscure the infinite bliss in all our hearts. So to remove these sufferings is very difficult😰. But it is easier to change the direction of these sufferings. Once we suffer for the sake of attaining God, there will be happiness of freedom😃. This is felt by the person who practices spiritual sadhanas🧘🏻‍♂.



எல்லாம் வல்ல சிவபெருமானைப் போற்றி! போற்றி!✨✨ ------------------ Let us all praise the almighty Lord Shiva 🌟🌟

 


Wednesday, 4 August 2021

 ✨ஓம் சிவாயநம🌻

----------------------

✨Om Sivaaya Namah 🌻