Search This Blog

Thursday, 12 August 2021

கவலையைக் கொண்ட நம் வாழ்க்கை

ஓயாதோ என்கவலை உள்ளே ஆனந்தவெள்ளம்‌ 

பாயாதோ ஐயா பகராய்‌ பராபரமே. 

                                  -தாயுமானவர்


விளக்கம்‌: 

⭐️⭐️⭐️⭐️⭐️

கவலையுற்றிருப்பது😔 ஜீவாத்மாக்களின்‌ இயல்பு. பிரபஞ்ச வாழ்க்கையில்‌ ஈடுபட்டிருக்கும்‌ வரையில்‌ கவலைக்கு ஒரு முடிவு இல்லை. பிறவிதோறும்‌ கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்ற மானுடன்‌ பரமனை நாடிக்‌ கவலைப்படுவானாகில்‌ அவன்‌ பாக்கியவானாகிறான்‌. கடலில்‌ அலைகள்‌🌊 எழுவது போன்று உள்ளத்தில்‌ கவலைகள்‌ எழுந்துகொண்டிருக்கின்றன. அவைகள்‌ உள்ளத்தினுள்ளே இருக்கின்ற பேரானந்தத்தை மறைக்கின்றன. அத்தகைய கவலையை ஒழித்துத்‌ தள்ளுவது மிகக்‌ கடினம்‌☹️. ஒதுக்குதற்குப்‌ பதிலாக உலகக்‌ கவலைகளை அருள்துறைக்கு உரிய கவலையாக மாற்றுவது மிகச்‌ சுலபம்‌. அதுவும்‌ கவலைதானே என்னும்‌ ஐயம்‌ எழலாம்‌. ஆனால்‌ கடவுளைக்‌ குறித்துக்‌ கவலைப்படுகின்ற அதே வேளையில்‌ ஆனந்தமும்‌😇 உருவெடுக்கின்றது. இதை ஆத்மசாதகன்‌🧘🏻‍♂ தன்‌ அனுபவத்தில்‌ கண்டுகொள்ள முடியும்‌.



No comments:

Post a Comment