Search This Blog

Wednesday, 1 September 2021

இரமண மகரிஷி இறைவனிடம் வேண்டுவது என்ன?

இரமண மகரிஷி அருளிய 🌻அருணாசல பதிகம்🌻:

கருணையா லென்னை யாண்டநீ யெனக்குன்‌ காட்சிதந்‌ தருளிலை யென்றா 

லிருணலி யுலகி லேங்கியே பதைத்திவ்‌ வுடல்விடி லென்கதி யென்னா 

மருணனைக்‌ காணா தலருமோ கமல மருணனுக்‌ கருணனா மன்னி 

யருணனி சுரந்தங்‌ கருவியாய்ப்‌ பெருகு மருணமா மலையெனு மன்பே. 


பொருள்‌✨: 


"மாண்புமிக்க அருணாசலம்‌ என்னும்‌ அன்புருவே, உலகுக்கு🌏 ஒளியூட்டும்‌ சூரியனுக்கும்‌🌞 ஒளிதரக்கூடிய ஞானசூரியனாய்‌ விளங்குபவனே! ஊற்றெடுத்து🌊 வற்றாத அருவியாய்ப்‌ பெருகுகின்ற உனது அவ்வியாஜ கருணையினால்‌ என்னை நீ ஆட்கொண்டருளினாய்‌. இனி எனக்கு உனது சொரூப தரிசனத்தைக்‌ கொடுத்து அருளாவிடில்‌, அஞ்ஞான இருளில்‌🌑 துன்புற்று இந்த உலகத்தில்‌, உன்‌ அருள்‌ தரிசனத்திற்காக ஏங்கிப்‌ பதைப்புற்று சரீரத்தை விடும்படி நேரிடுமானால்‌ என்னுடைய கதி என்னவாகும்‌? சூரியனைக்‌🌝 காணாது தாமரை மலர்ந்திடுமா? எனக்கு அருள்புரிவாயாக!" என்று ரமண மகரிஷி அண்ணாமலையாரிடம் வேண்டுகிறார்



No comments:

Post a Comment