திருமந்திரம் -- பாயிரம் -- திருமூலர் வரலாறு -- பாடல் 92:
⭐️⭐️⭐️⭐️⭐️
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நானிருந் தேனே.
⭐️⭐️⭐️⭐️⭐️
விளக்கம்:
⚡️⚡️⚡️⚡️⚡️
"குருநாதராகிய இறைவனின் அருளினால்தான் நான் இடையன் மூலனின் உடலில் புகுந்தேன். அதன்பிறகும் அவரின் அருளினால்தான் அந்த உடலிலேயே தவ நிலையில் இருந்து சதாசிவமாகவே மாறினேன். அவரின் அருளினால்தான் உண்மையான ஞானத்தை அடைந்து அதனுள்ளேயே உறைந்திருந்தேன். அவரின் அருளினால்தான் அவரோடு எப்போதும் இருந்தேன்." என்று இறைவனின் திருவருளாலே அனைத்தும் நடக்கின்றது என்பதை திருமூலர் நமக்கு உணர்த்துகின்றார்.
No comments:
Post a Comment