Search This Blog

Tuesday, 28 September 2021

திருநல்லூர் பெருமணம்:

 திருநல்லூர்பெருமணம்:

✨✨✨✨✨✨✨

திருஞானசம்பந்தர்‌ தன்‌ பெற்றோரின்‌ விருப்பப்படி திருமணம்‌ புரிந்து கொண்டு தம்‌ மனைவியுடன்‌ சுற்றம்‌ சூழ திருநல்லூர்பெருமணம்‌ ஆலயம்‌ வந்து இறைவனைத்‌ துதித்தார்‌. கோவிலில்‌ பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும்‌ வகுத்துக்‌ காட்டியது. சம்பந்தர்‌ தன்னுடன்‌ வந்த சுற்றத்தாரையும்‌ அடியார்களையும்‌ சிவசோதியில்‌ கலந்து முக்தி அடையும்‌ படி கூறினார்‌. சிலர்‌ நெருப்புச்‌ சோதியைக்‌🔥 கண்டு தயக்கமும்‌ அச்சமும்‌ கொள்ள, சம்பந்தர்‌ அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின்‌ மேன்மையைக்‌ கூறி நமச்சிவாய திருப்பதிகம்‌ பாடி தம்முடன்‌ வந்தோரை எல்லாம்‌ அச்சோதியில்‌ புகுமாறு சொல்லி, தாமும்‌ தன்‌ மனைவியுடன்‌ சோதியுட்‌ புகுந்து இறைவன்‌ திருவடியைச்‌ சேர்ந்தார்‌. 

சம்பந்தருடன்‌ சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர்‌, முருக நாயனார்‌, திருநீலக்க நாயனார்‌ ஆகிய நான்கு நாயன்மார்கள்‌ ஒரே நாளில்‌, ஒரே இடத்தில்‌ முக்தி அடைந்த தலம்‌ என்ற பெருமையும்‌ இத்தலத்திற்கு உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க சம்பவம்‌ நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம்‌ திருநல்லூர்‌ பெருமணம்‌ சிவலோகத்‌ தியாகேசர்‌ ஆலயம்‌.


No comments:

Post a Comment