Search This Blog

Wednesday, 15 September 2021

அன்பின் கொடை

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

தேவே, உன்னை நான்‌ நேசிப்பதால்‌ என்னை உனக்கே கொடுத்துவிடுகிறேன்‌. 

கைம்மாறு கேட்பது அன்பின்‌ வழியன்று. தன்னிடத்திருப்பதையெல்லாம்‌ ஓயாது எடுத்து வழங்குவது அன்பின்‌ இயல்பு. அல்லல்படுவதற்கு அன்பு என்றும்‌ ஆயத்தமாயிருக்கிறது. தன்னிடத்தில்‌ இருப்பதைக்‌ கொடுப்பதற்கு அன்பு ஆக்ஷேபம்‌ செய்வதில்லை. பழிக்குப்பழி வாங்குவது அன்பின்‌ செயல்‌ அன்று. அன்பு ஓயாது கொடுக்கிறது.


No comments:

Post a Comment