Search This Blog

Saturday, 9 October 2021

சம்பந்தருக்கு பொற்றாளம் வழங்கிய இறைவன்

திருக்கோலக்கா: 

✨✨✨✨✨✨✨

சீர்காழியில்‌ பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர்‌ திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார்‌ கோவில்‌ என்று வழங்கும்‌ இத்தலத்தில்‌ இருந்து தான்‌ தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத்‌ தொடங்கினார்‌. சீர்காழியில்‌ ஞானப்பாலுண்டு பதிகம்‌ பாடத்‌ தொடங்கிய சுமார்‌ மூன்று வயதுடைய சம்பந்தர்‌ தனது முதல்‌ தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத்‌ தான்‌. தனது சின்னஞ்சிறு கைகளால்‌ தட்டி தாளம்‌ போட்டுக்கொண்டு இத்தலத்தில்‌ இறைவனைத்‌ துதித்து பதிகம்‌ பாடினார்‌. கைகள்‌ வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன்‌ சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம்‌ கொடுத்து அருளினார்‌. இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத்‌ தந்தருளினாள்‌. ஆதலின்‌ இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர்‌. சம்பந்தருக்கு பொற்றாளம்‌ தந்த இறைவனை சுந்தரர்‌ தனது பதிகத்தில்‌ குறிப்பிட்டுப்‌ பாடியுள்ளார்‌.



No comments:

Post a Comment