இறைவா, நான் யாண்டும் உன்னுடைய சன்னிதியிலேயே இருக்கிறேன் எனினும் ஆணவம் குறுக்கிட்டு உன் காட்சியை மறைக்கிறது, என்னே!!!
சூரியனைவிடப் பன்மடங்கு சிறியது பூமி, சூரியன் இப்பூமிக்கும் இன்னும் பல கிரகங்களுக்கும் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மூடுபனி அவ்வெளிச்சத்தை வர வொட்டாது தடுத்து விடுகிறது. அற்ப ஆணவத்துக்கு இறைக் காட்சியை மறைக்கும் திறமை யிருக்கிறது. சூரிய வெப்பத்தால் மூடுபனியை அகற்றுவது போன்று இறைவன் அருளால் ஆணவ மலத்தை அகற்ற வேண்டும்.
No comments:
Post a Comment