Search This Blog

Monday, 20 July 2020

சிவபெருமான் நம்மிடம் எதை எதிர்பார்க்கின்றார்??

திருச்சிற்றம்பலம்
""""""""""""""""""""""""""""""
சிவபெருமான் நம்மிடம் எதை எதிர்பார்க்கின்றார்?????🤔🤔
💮💮💮💮💮💮💮💮
தக்கன் மகா வேள்வி ஒன்று நடத்தினார்.  ஆனால் அவ்வாறு வேள்வி நடத்தப்பட்ட காரணம் -- சிவபெருமானை அவமதிப்பதற்கு😐
💮💮💮💮💮💮💮💮
காம தேவன் சிவபெருமானிடம் தனது மலரம்புகளை எய்தி விடுகிறார்.  ஆனால் அதற்கான நோக்கம் -- சிவபெருமானின் தியானத்தைத் தடுப்பதற்கே😔
💮💮💮💮💮💮💮💮
சாக்கிய நாயனார் தினமும் லிங்கத்தின் மேல் கல் எறிந்தார்.  ஆனால் அதற்கான நோக்கம் -- மனதில் இறைவனிடம் கொண்ட அன்பின் வெளிப்பாடு🥰
💮💮💮💮💮💮💮💮
கண்ணப்ப நாயனார் தான் வேட்டையாடிய மாமிசத்தை இறைவனுக்கு வழங்கினார்.  ஆனால் அதற்கான நோக்கம் -- அகிலமே போற்றும் அளவிற்கு இறைவனிடம் கொண்ட பேரன்பு.♥️♥️
💮💮💮💮💮💮💮💮
இதன் விளைவுகள்: 
""""""""""""""""""""""""""
வீரபத்திரர், தக்கன் வேள்வியை அழித்து, தக்கன் சிரம் கொய்தார்😡
----------------------
காம தேவன் சிவபெருமானால் எரிக்கப்பட்டான்🔥🔥
----------------------
சாக்கிய நாயனாரும், கண்ணப்பரும் இறைவனின் சிறந்த பக்தர்களாக இறைவனால் ஏற்கப்பட்டனர்.😇😇
----------------------
இதன் மூலம் நமக்கு என்ன விளங்குகிறது??
சிவபெருமான் நம்மிடம் உண்மையான அன்பை🥰 மட்டுமே எதிர்பார்க்கின்றார்.
----------------------
நாம் எதை இறைவனுக்கு வழங்குகின்றோம் என்பது முக்கியம் அல்ல 
எந்த எண்ணத்துடன் வழங்குகின்றோம் என்பதே முக்கியம்😀
""""""""""""""""""""""""""""
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment