Search This Blog

Monday, 20 July 2020

சிவபெருமான் எங்கே இருக்கின்றார்?

திருச்சிற்றம்பலம்
"""""""'"''''''''""'''''''''''""""""""""
திருமந்திரம் -- மூன்றாம் தந்திரம் -- அட்டமா சித்தி: 
🌼🌼🌼🌼🌼🌼🌼
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருக்கின்ற நகரறி வாரே
🌼🌼🌼🌼🌼🌼🌼
விளக்கம்🌸:  இறைவனைக் காண வேண்டுமென்று ஓயாமல் அலைகள் அடித்துக் கொண்டிருக்கும் கடல்கள்🌊 சூழ்ந்த இவ்வுலகம்🌏 முழுவதையும் தன் பாதம் வலிக்க நடந்து 🚶‍♂️🚶‍♀️தேடினாலும் ஒரு பயனில்லை.  பார்க்கும் அனைத்தையும் இறைவனாக பார்த்து அந்த இறைவன் மீது அன்பு செலுத்துபவர்கள், சித்திகளை அடைந்து நமது உள்ளத்திலே இறைவன் வீற்றிருக்கின்றார் என்பதை அறிவார்கள்.
***
எனவே, இறைவனை வெளியில் எங்கு தேடினாலும் காண முடியாது.  உண்மையான அன்பால் தேடினால் கண்டு கொள்ளலாம் என்று திருமூலர் விளக்குகின்றார்.
"""""""""""""""""""""""""""""
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment