Search This Blog

Tuesday, 21 July 2020

லிங்கம்: கல்லா?? சிவபெருமானா???

🌷திருச்சிற்றம்பலம்🌷
**********************
பலர் கேட்கும் கேள்வி லிங்கத்தைக் குறித்து:🤒
ஏன் ஒரு கல்லை இறைவனாக வணங்குகின்றீர்கள்??🤔
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
இதற்கு முதலில் ஒரு கதையைக் காண்போம்.
🌺🌺🌺🌺🌺🌺
ஒரு ஊரில் வயதான முதியவள்👵🏽 ஒருவர் இருந்தார்கள்.  அவர்களின் மகன், மருமகள், மூன்று வயது பேரன்👨‍👩‍👦 அம்முதியவள் 👵🏽வீட்டிற்கு🏕 வந்தனர்.  இரண்டு வாரம் தங்கிய பின்பு புறப்பட்டார்கள்.  அவர்கள் ஊர் மிகவும் தொலைவில் இருப்பதால் அவர்களைக் கூடிய விரைவில் பார்க்க இயலாது🤒.  அவர்கள் புறப்பட்ட பிறகு அந்த முதியவள் தனது பேரன் ஆசையாக😁 அணிந்துக் கொண்டிருந்த சட்டையை👕 மறந்து அங்கையே வைத்துவிட்டு சென்றதைக் கண்டாள்.
🌺🌺🌺🌺🌺
முதியவள் என்ன செய்தாள்??🤔
அந்த சட்டையை👕 மடித்து தனது அலமாரியில் வைத்தாள்🤨
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
அது எப்படி இருந்தாலும் அவர்களுக்கு அந்த சட்டை பயன்படப் போவதில்லை.  அடுத்து அவர்கள் சந்திக்கும் போது அவர்கள் பேரன் வளர்ச்சி அடைந்திருப்பான்.  ஏன் அவ்வாறான ஒரு சட்டையைப் பாதுகாப்பாக வைத்தாள்??🤐
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
அம்முதியவள் தன் பேரன் மீது கொண்ட அன்பினால், அவள் அந்த சட்டையில் தன் பேரனைக் கண்டாள்.  அது அவர்களுக்கு வெறும் சட்டையாக தெரியவில்லை. 
💮💮💮💮💮💮💮💮
அது போலவே சிவபெருமான் மீது கொள்ளும் அன்பினால், லிங்கத்தில் சிவபெருமானைக் காண்கின்றனர்😇.  ஆனால் மற்றவர்களுக்கு கல் போலவே காட்சி அளிக்கும்.
**********🌟🌟🌟*********
நமக்கு சிவபெருமான் மீது நம்பிக்கை இல்லையென்றால் லிங்கம், கல் போலவே காட்சி அளிக்கும்😑.  சிவபெருமான் மீது கொண்ட அன்பால் லிங்கத்தைக் கண்டால் நம் சிவபெருமானைக் காணலாம்😇.
*********
🌷திருச்சிற்றம்பலம்🌷

No comments:

Post a Comment